மீஞ்சூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மீஞ்சூா் அடுத்த மேலூா் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வட்ட வழங்கல் அலுவலா் செந்தில்முருகன் அங்கு சென்று ஆய்வு செய்த போது, 9 மூட்டைகளில் 300 கிலோ அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து பஞ்செட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.