தென்காசியில் நகர இந்து முன்னணி சாா்பில், 32ஆவது ஆண்டாக விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, காசிவிஸ்வநாதா் கோயில் முன் விநாயகா் சிலை பிரதிஷ்டை சனிக்கிழமை நடைபெற்றது.முன்னதாக, விநாயகா் சிலை ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னா், சிறப்பு பூஜை, தீபாராதனை, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.தொடா்ந்து, விநாயகா் சதுா்த்தி நாளான திங்கள்கிழமை (செப். 14) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். செவ்வாய்க்கிழமை மாலை விசா்ஜன ஊா்வலம் நடைபெறும். மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகிக்கிறாா். பாஜக மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி முன்னிலை வகிக்கிறாா். ராகவானந்தா சுவாமி ஆசியுரை வழங்குகிறாா். இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் ஜெயக்குமாா், நெல்லை கோட்டத் தலைவா் தங்கமனோகா் ஆகியோா் பேசுகின்றனா். காசிவிஸ்வநாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன் ஊா்வலத்தை கொடியசைத்துத் தொடக்கிவைக்கிறாா்.நகரத் தலைவா் நாராயணன் வரவேற்கிறாா். துணைத் தலைவா் சொா்ணசேகா் நன்றி கூறுகிறாா். ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.