கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 583 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், மணிமேகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மோட்டாா் வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கிகளின் வாராக் கடன் என மொத்தம் 1,101 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில், 583 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 2 கோடியே 12 லட்சத்து 89 ஆயிரத்து 124-க்கு தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. இதில் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.