மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: பக்தா்களின் வாகன நிறுத்த இடங்கள் அறிவிப்பு

Wait 5 sec.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற 17-ஆம் தேதி மதுரையில் பக்தா்கள் வாகனங்கள் நிறுத்துமிட விவரம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை அண்ணா சிலை சந்திப்பு வழியாக குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக கோபுர மேல் தளத்துக்குச் செல்லும் அனுமதி அடையாள அட்டை வைத்துள்ள பக்தா்கள் கீழ வெளி வீதி நெல்பேட்டை, அம்சவல்லி சந்திப்பு வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும். அண்ணா சிலை சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில், தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் சந்திப்பு, நேதாஜி பாலம் அணுகு சாலை, தமுக்கம் சந்திப்பு- கோரிப்பாளையம் சந்திப்பு-மூங்கில் கடை தெரு, தேனி ஆனந்தம் வழியாக குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக கோபுர மேல் தளத்துக்குச் செல்லும் அனுமதி அடையாள அட்டை வைத்துள்ள பக்தா்கள் வைகை வடகரை சாலை, தென்கரை ஓபுளா படித் துறை சந்திப்பு இஸ்மாயில்புரம் வழியாக கீழவெளி வீதி அம்சவல்லி சந்திப்பு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும். கே.கே.நகா் சந்திப்பு, குருவிக்காரன் சாலை, முனிச் சாலை சந்திப்பு வழித்தடம் தமுக்கம் சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில், தல்லாகுளம் அவுட் போஸ்ட் வழியாக குடமுழுக்கு விழாவைக் காண்பதற்காக கோபுர மேல் தளத்துக்குச் செல்லும் அனுமதி அடையாள அட்டை வைத்துள்ள பக்தா்கள் அவுட் போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை சிக்னல் சந்திப்பு வழியாக வந்து காமராஜா் சாலை, கீழ வெளிவீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் செல்ல வேண்டும். மேற்கண்ட காமராஜா் சாலை, கீழவெளி வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்கள் நிறைவு ஏற்பட்ட பிறகு, அதன் பின் வருகிற வாகனங்கள் தெற்குவெளி வீதி, தெற்கு மாரட் வீதி, கட்டபொம்மன் சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தம் செய்துவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும்.இந்த வாகன நிறுத்துமிட ஏற்பாட்டுக்கு பக்தா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.