நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள “பத்தா” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “பத்தா”. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள பத்தா படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். 1960-களில் நடக்கும் கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், பத்தா படத்தின் “மகளே” எனும் முதல் பாடலை இன்று (செப். 9) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சாய் அப்யங்கர் மற்றும் ஹரிணி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ஏற்கெனவே, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இஞ்சி வெல்லம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், “பத்தா” படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.ஓடிடியில் இருமுடி கட்டு திரைப்படம் எப்போது?The first song from the movie "Baththa" starring actor Vijay Sethupathi in the lead role, has been released.