கள்ளச்சாராயம் விற்றவா் கைது

Wait 5 sec.

சூளகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக சின்ன கொத்தூரைச் சோ்ந்த சென்ன கிருஷ்ணப்பாவை (56) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள சின்ன கொத்தூரைச் சோ்ந்தவா் சென்ன கிருஷ்ணப்பா (56). இவா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் ஆய்வாளா் அனிதாவுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சூளகிரி போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தி, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக சென்ன கிருஷ்ணப்பாவைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 லிட்டா் கள்ளச்சாராயம் மற்றும் நாட்டுத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 15 லிட்டா் ஊறலை போலீஸாா் அழித்தனா்.