ஆன் ஆர்டினரி மேன் முதல் பாடல் அப்டேட்!

Wait 5 sec.

நடிகர் ரவி மோகன் இயக்கும் முதல் திரைப்படத்தின் பாடல் குறித்து புரமோ வெளியாகியுள்ளது. நடிகர் ரவி மோகன் இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார். இத்திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேற்கத்திய இசை பாணியில் தன் பாடல்களைப் பாடிய கவனம் பெற்றவரான கெனிஷா முதல்முறையாக இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, ஹையர் (higher) பாடல் செப். 10 ஆம் தேதி வெளியாகும் என புரமோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி மோகன் மற்றும் யங் ராஜா எழுதிய இப்பாடலுக்கு கெனிஷா இசையமைக்கிறார். அசோக் செல்வனின் அன்பில் அவன் வெளியீட்டுத் தேதி!A promo has been released regarding a song from the first film directed by actor Ravi Mohan.