பினராயி விஜயன், அவரது மகள், மருமகன் மீது எஃப்ஐஆர்! கேரள டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

Wait 5 sec.

சிஎம்ஆர்எல் பணமோசடி வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் டி. வீணா மற்றும் மருமகனும் முன்னாள் அமைச்சருமான பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி கேரள காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.கேரளத்தில் சிஎம்ஆா்எல் (கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம்) என்ற நிறுவனம் கருமணலை சட்டவிரோதமாகத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டுகொள்ளாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவா்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்துக்கு எந்தவித சேவையையும் பெறாமல் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் மாதம்தோறும் ரூ. 1.72 கோடியை சிஎம்ஆா்எல் வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, சிஎம்ஆா்எல் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ. 132.82 கோடி மதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதும், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு தொடா்ந்து பணம் அனுப்பி வருவதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வருமான வரித் துறையின் இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை பண மோசடி வழக்கைப் பதிவு செய்தது.தொடர்ந்து கடந்த மே மாதத்தில் பினராயி விஜயனின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இந்த நிலையில், பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை திரட்டிய ஆதாரங்கள் அடிப்படையில், பினராயி விஜயன், டி. வீணா மற்றும் அவரது கணவர் பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி கேரள டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்களின் அடிப்படையில் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.FIR against Pinarayi Vijayan, his daughter and son-in-law! Enforcement Directorate writes to Kerala DGP!தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பில்லை! மார்க்சிய கம்யூ. அறிவிப்பு!