அசோக் செல்வனின் அன்பில் அவன் வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

அன்பில் அவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.காதல் திரைப்படமாக உருவான இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக அசோக் செல்வன் நடிப்பில் திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அன்பில் அவன் வெளியாகும் தகவல் அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சணத்தி 4 பெண்களை மையப்படுத்திய கதை: மாரி செல்வராஜ்The release date of the movie Anbil Avan has been announced.