தவெக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவராக விஜய் செயல்படுவார் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப். 9) தெரிவித்தார். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்பது இந்தியா கூட்டணியின் ஒரு பகுதி என்றும், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதுதான் தனது கருத்து எனவும் குறிப்பிட்டார்.சென்னை பனையூரில் செய்தியாளர்களுடன் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தவெக கூட்டணியின் பெயர் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி; இக்கூட்டணியின் தலைவர் விஜய். தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.சரியான புரிதலுடன் கூட்டணி சிறப்பாக செயல்படும். புதிய கட்சிகளை இணைக்கும் நகர்வுகள் தொடங்கப்படும்.மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை கூட்டணி முடிவு செய்து அறிவிக்கும்.மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்பது இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியே. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதுதான் என் கருத்து. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். 2029-ல் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக முதல்வர் விஜய் பிரசாரம் செய்வார் என மாணிக்கம் தாகூர் பேசினார். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர்!TVK alliance leader joseph Vijay Congress Manickam Tagore