ஃபையர் போல்ட் நிறுவனத்தில் ஃபையர் லென்ஸ் டூன் என்ற ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகமாகியுள்ளது. வெறும் கண்ணாடியாக மட்டும் அல்லாமல், பாடல் கேட்க, அழைப்புகளுக்கு பதிலளித்துப் பேசும் வகையிலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள் என்ன? ஃபையர் லென்ஸ் டூன் ஸ்மார்ட் கண்ணாடி மூலம் அழைப்புகளுக்கு ஸ்மார்ட்போனை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மார்ட் கண்ணாடியில் இருந்தே அழைப்புகளை குரல் மூலம் மேற்கொள்ளலாம்.ஸ்மார்ட்போன் அழைப்பு அல்லது பாடல்களை கட்டுப்படுத்த கண்ணாடியின் பக்கவாட்டில் டச் கன்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. 2 விநாடிகள் அழுத்திப்பிடித்தால் போதுமானது.காதுமடல்களுக்கு அருகே ஆடியோ வரும் வகையில் கண்ணாடியில் ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.புளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் உடன் கண்ணாடியை இணைத்துக்கொள்ளலாம். கண்ணாடியின் இருபுற முனைகளையும் 5 விநாடிகள் அழுத்தினால் ஸ்மார்ட்போன் உடன் கண்ணாடி புளூடூத் வழியாக இணையும். (ஸ்மார்ட்போனில் புளூடூத் இயக்க நிலையில் இருக்க வேண்டும்)நாள்காட்டி அலாரம், கூகுள் வழித்தடம் போன்றவற்றுக்கு உகந்தது.15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம். பாடல் கேட்டால் 6 மணி நேரம் பயன்படுத்தலாம். அதீத பயன்பாட்டிலும் வெப்பமாகாத ஸ்மார்ட்போன்! இன்ஃபினிக்ஸ் 70 ஹாட் அறிமுகம்!Fire Boltt Fire Lens Dune Smart Glasses Bluetooth Audio Hands-Free Calls Voice Assistant