மேட்டூர் அணையின் நீர்மட்ட நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,718 கன அடியாக குறைந்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடகம், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறக்க மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(செப். 9) மாலை நிலவரப்படி, விநாடிக்கு 4,822 கன அடியிலிருந்து விநாடிக்கு 3,718 கன அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 91.50 அடியிலிருந்து 91.28 அடியாக குறைந்துள்ளது.நீர் இருப்பு 54.12 டிஎம்சியாக உள்ளது.Water inflow into Mettur Dam has decreased to 3,718 cubic feet per second.செப். 16-ல் தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டம்! இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோனை!