காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வினாடிக்கு 7,598 கன அடியாக அதிகரித்துள்ளதுமேட்டூர் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 522 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலை 4 மணிக்கு வினாடிக்கு 7,598 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு12,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.52 அடியிலிருந்து 88.32 அடியாக உள்ளது. நீர் இருப்பு 50.83 டிஎம்சியாக உள்ளது.Increase in water inflow to Mettur Dam: Status as of the evening of September 13தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்