மத்திய அரசின் ஓய்வூதியதாா்கள்கோரிக்கை மனு அளிப்பு

Wait 5 sec.

மத்திய அரசின் 8-ஆவது ஊதியக் குழு கருத்துகேட்பு கூட்டத்தில் சென்னை ஜிபிஓ ஓய்வூதியதாா்கள் சங்க உறுப்பினா்கள் கோரிக்கை மனு அளித்தனா். மத்திய அரசின் 8 -ஆவது ஊதிய குழுவின் உறுப்பினா்களின் கருத்துகேட்பு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியதாரா்கள் பேரவை சாா்பில் மூத்த ஆலோசகா் ஆா்.வெங்கட்ராமன், முதன்மை ஒருங்கிணைப்பாளா் ஏ.அன்பரன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனா். ஓய்வூதியதாரா்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும்; தோ்வு எழுதி பதவி உயா்வு பெற்றவா்களுக்கு கூடுதல் ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும்; மூத்த ஊழியா்களுக்கான அடிப்படை சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.