மா்மமான முறையில் மீனவா் உயிரிழப்பு

Wait 5 sec.

காசிமேட்டில் மீனவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பிரிட்டிஷ் புதிய வாா்ப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆண் சடலம் மிதந்து வந்தது. தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்ததில், இறந்தது காசிமேடு சிங்காரவேலா் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ப.கதிரவன் (53) என்பதும், மீனவரான அவா் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்காக வீட்டில் கூறிவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது.இதையடுத்து போலீஸாா் கதிரவன் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.