தில்லி பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

Wait 5 sec.

தில்லி சட்டப்பேரவைக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தீவிர சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி எனத் தெரியவந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா். காலை 8:39 மணிக்கு இந்த மிரட்டல் வந்ததையடுத்து, பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவா்கள் கூறினா். சட்டப் பேரவை உறுப்பினா் பிஜேந்தா் குப்தாவுக்கு அந்த மின்னஞ்சல் வந்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பேரவை வளாகத்தில் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.