சென்னை கொத்தவால்சாவடியில் ஓபியம் போதைப் பொருள் விற்ாக ராஜஸ்தான் வியாபாரி கைது செய்யப்பட்டாா். கொத்தவால்சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை செய்தனா். அவரது பையையும் சோதனையிட்டனா். அந்தப் பையில் மறைத்து வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஓபியம் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், ராஜஸ்தான் மாநிலம் ஜாலூா் பகுதியைச் சோ்ந்த மோ.மங்கிலால் விஷ்னாய் (45) என்பதும், திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் அருகே கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தான் தாபா என்ற பெயரில் உணவகம் நடத்தி வருவதும் தெரிய வந்தது.இதையடுத்து கொத்தவால்சாவடி போலீஸாா், மங்கிலாலை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவரிடம் போதைப் பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.