தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது பருவகால சராசரியை விட 1.3 புள்ளிகள் அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கு லேசான மழையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், திங்கள்கிழமை அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 மற்றும் 26 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவத்தின் சராசரியை விட 1.1 புள்ளிகள் அதிகமாகும். சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான நேரத்தில் நகரில் 3.4 மிமீ மழை பெய்தது. மாலை 5.30 மணியளவில் ஈரப்பதம் 65 சதவீதமாக பதிவாகி இருந்தது. சமீா் செயலியின்படி மாலை 6 மணி அளவில் நகரில் காற்றின் தரம் 86 என்ற அளவில் ’திருப்திகரமான’ பிரிவில் பதிவாகி இருந்தது.