தி பாரடைஸ் படத்துக்கு டிரைலர் கிடையாது: நானி

Wait 5 sec.

நடிகர் நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படத்துக்கு டிரைலர் வெளியாகாது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஆக்சன் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் செப். 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப் படத்தில் நாயகியாக கயாது லோஹர் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ், மோகன் பாபு, சோனல் குல்கர்னி நடித்துள்ளார்கள்.ஸ்ரீகாந்த் ஒடேலா இயகிய தசரா திரைப்படத்தில் நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தார்கள். இதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனமாடியுள்ள் பாடல் வைரலானதும் கவனிக்கத்தக்கது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நானி இது குறித்து கூறியிருப்பதாவது: இரண்டு முறை வெளியீட்டு தேதி மாறியதால் சிறு தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்கள் பொறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படம் தனக்கான பாதையைத் தானே அமைத்துக் கொண்டது போன்ற உணர்வைத் தருகிறது. ஸ்ரீகாந்தின் பிரம்மாண்ட பார்வையைத் திரையில் கொண்டு வந்துள்ளோம். கால அவகாசம் குறைவாக இருப்பதால் டிரெய்லர் வெளியிடவில்லை. நான் ரசிகர்களை குறைவாக மதிப்பிடவில்லை. இந்தப் படத்துக்கு தேவையான புரமோஷன் ஏற்கெனவே அதிகமாகவே இருக்கிறது. டிரைலருக்காக 4 நாள்கள் அனைவரும் வேலை பார்க்க வேண்டும். படம் முக்கியமா டிரைலர் முக்கியமா என்றால் படம்தான் முக்கியம் என்பேன். இது என் திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான, சவாலான படமாக அமைந்தது. சண்டைக் காட்சிகளின் போது எனக்கும் சக நடிகர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன; எங்கள் உழைப்பையும் ரத்தத்தையும் திரையில் காண்பீர்கள்.டீசரைப் பார்த்துவிட்டு இது வெறும் வன்முறைப் படம் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், 'தி பாரடைஸ்' ஒரு அழகான தாய்-மகன் கதையையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அழுத்தமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டது. பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை இப்படம் நிச்சயமாக வழங்கும் என்றார். மலையாளத் திரையுலகில் முதலிடம்: வசூல் சாதனை படைத்த பெத்லகேம் குடும்ப யூனிட்!No trailer for the movie 'The Paradise': Nani