சியான் - 63 படத்தின் புதிய அப்டேட்!

Wait 5 sec.

விக்ரம் நடிக்கும் சியான் - 63 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. நடிகர்கள் ரியா ஷிபு, எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.வீர தீர சூரன், தங்கலான் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பின்னடவைச் சந்தித்ததால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் இருக்கிறார்.சியான் - 63 என தற்போது பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்காக உடலைக் கட்டுமஸ்தாக மாற்றும் முயற்சியில் இருப்பதால் விக்ரம் உடல்பயிற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, படத்தின் டைட்டிலை நாளை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சத்யஜோதி ப்லிம்ஸ்’ அறிவித்துள்ளது.A new update of Vikram's film Chiyaan - 63 has been released.கிளாடியேட்டர்ஸ் - அஜித்துடன் நடித்துவரும் முதல்வர் விஜய்!