உலக நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஒரு சர்வதேச பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு. அந்த மாநாட்டின் பின்னணியில், உலகையே வியக்க வைக்கும் ஒரு பிரம்மாண்ட கல் மாளிகை போன்ற தோற்றம்.நீண்டு செல்லும் தூண்கள்... அவற்றில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள்... ஒரு முனையில் நின்று பார்த்தால் மறுமுனை எங்கே முடிகிறது என்றே தெரியாத அளவுக்கு தொடரும் அந்தக் காட்சி...அது வேறு எதுவுமல்ல...தமிழர்களின் கட்டடக்கலைப் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் புகழ்பெற்ற காரிடார்!2026-ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கும் காட்சியின் பின்னணியாக இந்தக் காரிடார் இடம்பெற்றிருப்பது, தற்போது சர்வதேச அளவில் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இந்த பிரம்மாண்டத்தின் பின்னால் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு வரலாறு இருக்கிறது...முடிவில்லாமல் நீளும் கல் மாளிகை!ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் நுழையும் போது, பக்தர்களை முதலில் வியக்க வைப்பது அதன் பிரம்மாண்டமான பிரகாரங்கள்தான். குறிப்பாக, மூன்றாவது பிரகாரம் எனப்படும் வெளிப்புற காரிடார் தனித்துவமானது.சுமார் 1,212 தூண்கள்... ஒவ்வொரு தூணும் சுமார் 9 மீட்டர் உயரம்... அந்தத் தூண்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் தொடர்ச்சியாக அமைந்திருப்பதை ஒரு முனையில் இருந்து பார்க்கும்போது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தூண்களே நீண்டு செல்வது போன்ற ஒரு மாயக் காட்சி உருவாகிறது.ஒரு தூண் முடிந்ததும் மற்றொரு தூண்... அதற்குப் பின்னால் இன்னொரு தூண்... இப்படியே தொடரும் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, இது ஒரு நடைபாதையா அல்லது முடிவே இல்லாத கல் மாளிகையா என்ற வியப்பு ஏற்படுகிறது. இதுதான் ராமேசுவரம் காரிடாரின் தனிச்சிறப்பு.ஆயிரம் தூண்களுக்குப் பின்னால் ஒரு வரலாறு!இந்தப் பிரம்மாண்டம் ஒரே நாளில் உருவானதல்ல. ராமநாதசுவாமி கோயில் ஒரே ஒரு மன்னரால், ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல.பல நூற்றாண்டுகளாக பாண்டியர்கள், சேதுபதி மன்னர்கள் உள்ளிட்ட பல அரசர்களின் பங்களிப்பால் கோயில் படிப்படியாக விரிவடைந்தது.அந்த வரலாற்றில், ராமேசுவரத்தின் இந்த பிரம்மாண்டமான மூன்றாவது பிரகாரத்தை உருவாக்கிய பெருமை சேதுபதி மன்னர்களுக்குச் செல்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி காலத்தில் இந்தப் பிரகாரம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.நான்கு கோபுர வாயில்களையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்தப் பிரகாரத்தின் இருபுறமும் உயரமான மேடைகள் அமைக்கப்பட்டு, அதன் மீது ஆயிரக்கணக்கான தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. தூண்களின் மேற்பகுதியில் சிங்கம் அமர்ந்திருப்பது போன்ற சிற்ப அமைப்புகளும் காணப்படுகின்றன. விஜயநகர மன்னர்களின் கட்டடக்கலை பாணியின் தாக்கத்தையும் இந்தத் தூண்களில் காண முடிகிறது.பிரிக்ஸ் தலைவர்களை வியக்க வைத்த ராமேசுவரம் கோயில்எவ்வளவு பெரியது தெரியுமா?இந்த காரிடாரின் பிரம்மாண்டத்தை எண்ணிக்கையில் சொன்னால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். கோயிலின் பல்வேறு காரிடார்களைச் சேர்த்து, அவற்றின் மொத்த நீளம் சுமார் 3,850 அடி. அதாவது சுமார் 1.17 கிலோமீட்டர்!மூன்றாவது பிரகாரத்தின் நான்கு பக்கங்களும் நூற்றுக்கணக்கான மீட்டர் நீளத்திற்கு விரிந்து கிடக்கின்றன.ஒவ்வொரு அடியிலும் கல்...ஒவ்வொரு கல்லிலும் கலை...ஒவ்வொரு தூணிலும் ஒரு வரலாறு...அதனால்தான் ராமேசுவரம் காரிடார், உலகின் மிகப்பெரிய கோயில் பிரகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.வெறும் நடைபாதை அல்ல!பிரகாரம் என்றால் வெறும் கோவிலைச் சுற்றி நடக்கும் பாதை என்று நினைத்துவிட முடியாது. பக்தர்கள் இறைவனை தரிசித்து, கோயிலைச் சுற்றி வலம் வருவதற்கும், உற்சவ மூர்த்திகளின் ஊர்வலங்களுக்கும், பல்வேறு சடங்குகள் மற்றும் திருவிழா நிகழ்வுகளுக்கும் இந்தப் பிரகாரங்கள் முக்கியமானவை.ராமேசுவரத்தில் அந்தப் பாரம்பரியம் பிரம்மாண்டமான கட்டட வடிவத்தை எடுத்துள்ளது.அதனால் இங்கு கட்டடக்கலை மட்டும் இல்லை...சிற்பக்கலை இருக்கிறது...வழிபாட்டு மரபு இருக்கிறது...திருவிழா பாரம்பரியம் இருக்கிறது... இவை அனைத்தும் ஒன்றாக இணைந்திருப்பதுதான் ராமேசுவரம் காரிடாரின் தனிச்சிறப்பு.மேலும், இதன் தரைத்தள அமைப்பு சதுரங்கப் பலகையைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஆன்மிகத்திலும் தனி இடம்!கட்டடக்கலை மட்டுமல்ல... ராமேசுவரம் ஆன்மிக ரீதியாகவும் உலகப் புகழ்பெற்ற தலம்.12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் ராமநாதசுவாமி கோயில், இந்து சமயத்தின் முக்கியமான சார் தாம் யாத்திரைத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.ராமாயண மரபுடன் தொடர்புடைய பல்வேறு நம்பிக்கைகளும் இத்தலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன.கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களும் ராமேசுவரம் யாத்திரையின் முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றன.அதனால், இங்கு வரும் பக்தர்களுக்கு இது ஒரு கோவில் மட்டுமல்ல...வரலாறும்... ஆன்மிகமும்... கட்டடக்கலையும்... ஒரே இடத்தில் சங்கமிக்கும் அனுபவம்.2019-இல் உலகத் தலைவர்களை கவர்ந்த அதே காட்சி!ராமேசுவரத்தின் இந்த காரிடார் சர்வதேச அளவில் கவனம் பெற்றது இப்போது முதல் முறையல்ல.2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தமிழ்நாட்டில் சந்தித்தபோதும், தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் கோவில் காரிடார் காட்சிகள் சர்வதேச கவனத்தைப் பெற்றன.அப்போது தமிழகத்தின் ஆயிரம் ஆண்டுகால கட்டடக்கலை, உலக அரசியலின் முக்கியமான ஒரு சந்திப்பின் பின்னணியில் இடம்பெற்றது.2026... மீண்டும் உலக அரங்கில் ராமேசுவரம்!காலம் கடந்தது... ஆனால் அந்தக் காட்சியின் பெருமை மட்டும் மறையவில்லை.2026-ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மீண்டும் அதே ராமேசுவரம் காரிடார் உலக அரங்கில் முன்னிறுத்தப்பட்டுள்ளது.உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்கும் காட்சியின் பின்னணியில் ராமநாதசுவாமி கோயிலின் பிரம்மாண்டமான தூண்கள் இடம்பெற்றுள்ளன.ஒரு வகையில் பார்த்தால்...2019-இல் உலகத் தலைவர்களின் சந்திப்புக்கு சாட்சியாக இருந்த ராமேசுவரம்... 2026-இல் உலகத் தலைவர்களை வரவேற்கும் இந்தியாவின் கலாசார அடையாளமாக மாறியுள்ளது! உலக அரங்கில் தமிழர்களின் பெருமை!இந்தக் காட்சி தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்டடக்கலை குறித்து மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பதிவில், ராமேசுவரம் கோயிலின் காரிடார் வெறும் கட்டடக்கலை அதிசயம் மட்டுமல்ல என்றும், தமிழ்நாட்டின் ஆழமான ஆன்மிக பாரம்பரியம் மற்றும் தமிழ் கோயில் கட்டடக்கலை மேன்மையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.உலகத் தலைவர்களின் முன்னிலையில் இந்தக் காட்சி இடம்பெறுவது, உலக அரங்கில் தமிழர் பண்பாடு மற்றும் தமிழ்நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரும், இந்தியாவின் தொன்மையான நாகரிகப் பாரம்பரியத்தை உலக அரங்கில் பிரதமர் முன்னிறுத்துவது பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.பாரம்பரியமே நமது வலிமை!பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த பிரம்மாண்டம்...ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூண்களால் எழுப்பப்பட்ட அந்தக் கலைக்கோயில்...இன்று உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக நிற்கிறது.காலம் மாறலாம்... ஆட்சிகள் மாறலாம்... தலைமுறைகள் மாறலாம்... ஆனால் கல்லில் செதுக்கப்பட்ட கலை மட்டும் காலத்தை கடந்து நிற்கும்.அதற்கு உயிரோட்டமான சாட்சியாக... ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் அந்த முடிவில்லாத காரிடார்!தமிழர்களின் கட்டடக்கலைத் திறமைக்கு சான்றாக பல நூற்றாண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் இந்தக் கல் மாளிகை...இன்று பிரிக்ஸ் உலகத் தலைவர்களை வரவேற்கும் காட்சியின் பின்னணியில் நின்று, “இது வெறும் கல் அல்ல... இது தமிழர்களின் வரலாறு!” என்று உலகுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது.The Rameswaram temple amazed the BRICS leaders. It is not merely stone... it is the history of the Tamils!உலகளாவிய நிா்வாக சீா்திருத்தம் காலத்தின் தேவை! பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி வலியுறுத்தல்!