ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஓட்னில் பார்ட்மேன் காயம் காரணமாக விலகியுள்ளார்.ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் ஓட்னில் பார்ட்மேன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.Proteas Men Squad Update - Dafabet ODI series vs Australia Ottneil Baartman has been ruled out of #TheProteas three-match Dafabet ODI series against Australia due to a left hamstring injury.Duan Jansen has been named as his replacement and will join the squad when they… pic.twitter.com/VGYe1tJ0ni— Proteas Men (@ProteasMenCSA) September 13, 2026முதல் தர போட்டிகளில் விளையாடியபோது, ஓட்னில் பார்மேனுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக மாற்று வீரராக அணியில் டுயன் யான்சென் சேர்க்கப்பட்டுள்ளார்.மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள டுயன் யான்சென் வேகப் பந்துவீச்சாளர் மார்கோ யான்செனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.South African fast bowler Ottniel Baartman has withdrawn from the ODI series against Australia due to injury.புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது; டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோ ரூட்!