இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசியுள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது பேட்டர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்கிய அணிக்கு கடினமாக இருக்கும். நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை ஆலோசித்து, சிறந்த பிளேயிங் வெலனை உருவாக்க வேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறும், எந்த வடிவிலான போட்டி என்பதற்கு ஏற்றவாறும் பிளேயிங் லெவன் இருக்க வேண்டும். ஆனால், புதிய வீரர்கள் நன்றாக செயல்பட்டனர் என்றார்.மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் அண்மையில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Pakistan captain Babar Azam has spoken about the team's complete loss in the Test series against England.புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது; டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோ ரூட்!