ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.ஷஃபாலி வர்மா அரைசதம்; வங்கதேசத்துக்கு 150 ரன்கள் இலக்கு!முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 24* ரன்கள், ரிச்சா கோஷ் 21 ரன்கள், பிரதீகா ராவல் 20 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.வங்கதேசம் தரப்பில் சுல்தானா கட்டூன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மரூஃபா அக்தர், நஹிதா அக்தர், ரபேயா கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.Batting first in the Asia Cup cricket semi-final against Bangladesh, the Indian team scored 149 runs for the loss of 6 wickets.ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவீர்களா? ரோஹித் சர்மா பதில்!