லக்னௌவில் இருந்து சௌதி அரேபியாவுக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னௌ விமான நிலையத்தில் இருந்து 133 பயணிகளுடன் இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் இன்று (செப். 10) மாலை சௌதி அரேபியாவின் தம்மாம் நகரத்துக்குப் புறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானம் நடுவானில் பறந்தபோது விமானத்துக்குள் "Bomb" (வெடிகுண்டு) என எழுதப்பட்டு கிடந்த ஒரு காகித்தை விமானப் பணியாளர் ஒருவர் கண்டெடுத்துள்ளார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகமதாபாத் விமான நிலையத்தில் அந்த விமானம் மாலை 5.45 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விமானம் முழுவதும் சோதனைகள் மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி தில்லியில் இருந்து தம்மாம் நகரத்துக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானத்தில் கிடைத்த மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து அந்த விமானமும் உடனடியாக அகமதாபாதில் தரையிறக்கப்பட்டது. பின்னர், அந்த விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியான மிரட்டல் என உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.ம.பி. கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு! 16 பேர் கைது!It has been reported that a bomb threat was issued against an IndiGo flight departing from Lucknow for Saudi Arabia.