பிரிட்டனில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, இன்று (செப். 10) பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார்.இந்த நிலையில், நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பிரிட்டனில் சனியன்று (செப் 12) தொடங்கி வைக்கவுள்ளார். இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார் பந்தயத்தை நடத்தும் ’லீ மேன்ஸ்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் சில நாள்களுக்கு முன் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ்த் திரையுலகில் இருவரும் இரு துருவங்களாக இருந்த நிலையில், அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவிருப்பது இருவரின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.A special guest will be waving the green flag at Silverstone this weekend! C. Joseph VIJAYThe Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the… pic.twitter.com/pZiZOKy7yW— Le Mans Cup (@LeMansCup) September 10, 2026 Chief Minister Vijay to flag off the car race featuring Ajith Kumar!முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்! முழு விவரம்!