தமன்னா, அதிதி ராவ் நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 டிரைலர்!

Wait 5 sec.

நடிகர்கள் சித்தார்த், தமன்னா, அதிதி ராவ் நடிப்பில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் இந்தியத் தொடர்களில் கவனம் பெற்ற தொடர் லஸ்ட் ஸ்டோரிஸ். வயது வந்தவர்களுக்கான கதையாக ஒவ்வொரு குறும்படக் கதையும் காதல், காமம், உறவு மீறல்கள் ஆகியவற்றால் பிணைந்திருக்கும் மனங்களை வெளிப்படுத்தும்படி எழுதப்பட்டிருக்கும். லஸ்ட் ஸ்டோரிஸ் தொடரின் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மூன்றாம் சீசன் உருவாகியுள்ளது. இதில், நடிகர்கள் சித்தார்த், ராதிகா ஆப்தே, அதிதி ராவ் ஹைதாரி, கொங்கனா சென் சர்மா, விஜய் வர்மா, அபிஷேக் பானர்ஜி, அலி ஃபசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த சீசனுக்கான குறும்படங்களை இயக்குநர்கள் விக்ரமாதித்யா மோத்வானே, கிரண் ராவ், ஷகுன் பத்ரா, விஷால் பரத்வாஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.தற்போது, லஸ்ட் ஸ்டோரிஸ் - 3 செப். 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. The trailer for the series Lust Stories 3, starring actors Siddharth, Tamannaah, and Aditi Rao, has been released.