யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸை பென் ஷெல்டன் வீழ்த்திய, அரையிறுதிக்கு இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளார். இந்தப் போட்டி 4 மணி நேரம் 28 நிமிஷங்கள் நடைபெற்றது. மிகுந்த கடினமாக சென்ற கடைசி செட்டை ஷெல்டன் 10-7 என வென்று, அல்கராஸுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் இத்தாலியின் கார்லோஸ் அல்கராஸ் - அமெரிக்காவின் பென் ஷெல்டன் மோதினார்கள். இந்தப் போட்டியில் 6-7 (5-7), 6-1, 6-3, 1-6, 7-6 (10-7) என செட் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றார்.இந்தப் போட்டி 228 நிமிஷங்கள் (4 மணி நேரம் 28 நிமிஷங்கள்) நடைபெற்றன. அமெரிக்காவில் நள்ளிரவு 3.33 மணிக்கு வரைக்கும் இந்தப் போட்டி நடைபெற்றது. நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் தோல்வி அடைந்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. முன்னதாக, தரவரிசையில் டாப் 3 இடத்தில் இருக்கும் வீரர்களுடன் 0-17 என மோசமான சாதனையை ஷெல்டன் வைத்திருந்தார். முதன்முறையாக ஷெல்டன் இதனை மாற்றி டாப் 3 வீரரை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அரையிறுதியில் அவர் சக அமெரிக்க வீரரான பிரான்சிஸ் டியாஃபோ உடன் மோதவிருக்கிறார். இதுவரை அரையிறுதியில் வெல்லாத ஷெல்டனுக்கு இந்தமுறை நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.Ben Shelton scores the biggest win of his career and a spot in the US Open semifinals! pic.twitter.com/2PCndRLcpL— US Open Tennis (@usopen) September 9, 2026யுஎஸ் ஓபனில் 142 நிமிஷ போராட்டம்..! 6ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா! 4 hours and 28 minutes: Shelton defeats defending champion Alcaraz in US Open QuarteFinals