கர்நாடகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பட்டியலில் பெயர் தொடர்பான முரண்பாடு குறித்து விளக்கமளிக்க பாரத ரத்னா விருது பெற்ற 92 வயது விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் 17 அன்று வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் அக். 19 அன்று வெளியிடப்படவுள்ளன.இதனிடையே, வாக்காளர் வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தகவல்களில் தவறு இருப்பவர்கள் திருத்தி, மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளன.இந்த நிலையில், மூத்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் பெயர், கடந்த 2002 வாக்காளர் பட்டியலில் "Prof CNR Rao" என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்டியலில் "f" என்ற எழுத்து கூடுதலாகச் சேர்க்கப்பட்டு "Proff CNR Rao" என்று இடம்பெற்றுள்ளது.இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சி.என்.ஆர். ராவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர். நடைமுறையின்படி, குறிப்பிட்ட நபர் மட்டுமே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியும். எனவே, இந்திய அறிவியல் கழகத்திற்கு அருகிலுள்ள மல்லேஸ்வரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஆஜராக ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த நிலையில், சி.என்.ஆர். ராவ் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கோரிக்கை வைத்துள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு, நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ சி.என்.ஆர். ராவுக்கு மத்திய அரசு வழங்கியது. இவர், இந்த விருதைப் பெற்ற மூன்றாவது விஞ்ஞானி ஆவார்.SIR notice to 92-year-old Bharat Ratna scientist CNR Rao! 2030-க்குள் செய்யறிவால் மனிதகுலம் அழியும்! ஆந்த்ரோபிக் வல்லுநர் எச்சரிக்கை!