என் குடும்பத்துக்கு நன்றி: ஜேசன் சஞ்சய்

Wait 5 sec.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் தன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ள பேச்சு கவனம் பெற்றுள்ளது. முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படம் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது, ஜேசனின் முதல் திரைப்படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட பேசிய ஜேசன் சஞ்சய், “இயக்குநர் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் அம்மாவிடம் சொன்னேன். சிட்டி ஆஃப் காட் (city of god) திரைப்படம் பார்த்த பின்புதான் நானும் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. வாழ்க்கையில் நம் அனைவருக்கும் சிக்மா தருணம் இருந்திருக்கும். நாம் எடுத்த சிறிய முடிவால் வாழ்க்கையில் பெரிய மாற்றமே ஏற்பட்டிருக்கும். அப்படியொரு சாதாரண மனிதன் வாழ்க்கையில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. உங்களால் இக்கதையுடன் தொடர்புபடுத்த முடியும். இயக்குநராக ஆசைப்படுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது; நிறைய குறும்படங்களை எடுங்கள், எழுத ஆரம்பிப்பது முக்கியமானது. திரைப்படம் எடுக்க பொறுமையையும் கற்றுக்கொள்ளுங்கள். காலையில் இந்தக் காட்சியை எடுக்கலாம் என படப்பிடிப்புக்குச் செல்வோம். ஆனால், அங்கு நாம் எதிர்பார்த்த மாதிரி நடக்காது. நிறைய தடங்கல்கள் வரும். அதையெல்லாம் கடந்து நாம் நினைப்பதை எடுக்கவும் பழக வேண்டும். சிக்மா திரைப்படத்திற்காக என் குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார். கார்த்தி, சூரி... யாருக்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன?Director Jason Sanjay's speech, in which he thanked his family, has garnered attention.