மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! திமுக போட்டி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Wait 5 sec.

தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டில் நடைபெற்று வரும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.மதுராந்தகம், தாராபுரம் இரண்டுமே தனித் தொகுதிகள் என்பதால், திமுக அதனை புறக்கணிக்கக் கூடாது என்று கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டே ஆக வேண்டும் என்று கனிமொழி உள்ளிட்டோர் வலியுறுத்திய நிலையில், திமுக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவை திமுக தலைமை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.