கேரளத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டை செப். 15-க்குள் தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அந்த மாநில முதல்வர் வி.டி சதீசன் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சதீசன், மின்நுகர்வு பயன்பாடு அதிகரிப்பு, போதிய மழையின்மை, அணைகளுக்குக் குறைவான நீர்வரத்து ஆகியவற்றால் மாநிலம் மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றது. இந்தச் சூழலில், அண்டை மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்குவதும், குறிப்பாக மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் அதைப் பெறுவதும் கடினமாகியுள்ளது. உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக் முன்னணி (யுடிஎஃப்) அரசு நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது, அதன்படி ஒரு யூனிட் மின்சாரம் சுமார் ரூ. 4..29-க்குக் கிடைத்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் பின்னர் முந்தைய இடதுசாரி அரசால் ரத்து செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தம் தொடர்ந்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இத்தகைய சூழலை முன்கூட்டியே கணித்தே காங்கிரஸ் தலைமையிலான அரசு அந்த முடிவை எடுத்திருந்தது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பிறகு, மாநிலம் இப்போது மிக அதிக விலைக் கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை சுமார் ரூ. 10 வரை உயர்ந்துள்ளது. போதுமான மின்சாரம் கிடைக்காத சூழலால், பல இடங்களில் சிக்கல்கள் உள்ளன. வறட்சி போன்ற சூழல் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் மின் உற்பத்தி குறைவு ஆகியவை மாநிலத்திற்கு வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்குவதைக் கடினமாக்கியுள்ளது. இருப்பினும், நுகர்வோர் மீது அதிக நிதிச் சுமையைச் சுமத்தாமல் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த சிக்கலைச் சமாளிக்கப் போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேரள மாநில மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.The Keralam government is taking steps to address the power shortage in the state and aims to bring in additional electricity and resolve the situation by around September 15, Chief Minister V D Satheesan said here on Wednesday.