சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, மூன்று மாதங்கள் ஆகியும், இன்னமும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.செங்குன்றம் புதிய பேருந்து நிலையத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. எனினும், தமிழக அரசு போக்குவரத்து கழகம், புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை என அரசு பேருந்து பயணிகள் தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேரூராட்சி உள்ள செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வந்து கடந்த ஜூன் மாத இறுதியில் நிறைவடைந்தது. புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்ற தவெக அரசு விரைவில் பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்னமும் திறக்கப்படவில்லை.குறிப்பாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் வெட்ட வெளியில், அரசு பேருந்துகளுக்காக கொளுத்தும் வெய்யிலில் காத்துக் கொண்டிருக்கும் பேருந்து பயணிகள், செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே நிழல் குடை அமைத்து தரக் கோரியும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில், பேருந்து பயணிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், அச்சாலையை கடப்பதற்கு போக்குவரத்துக் காவல்துறை பணியமர்த்த வேண்டும் என்றும் செங்குன்றம் போக்குவரத்து போலீசருக்கு அரசு பேருந்து பயணிகள் அடுக்கடுக்காக கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.எனினும், இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இறங்கும் பயணிகள் கடும் துயரங்களை அடைவதாகவும் கூறுகிறார்கள்.புதிய பேருந்து நிலையத்தின் விவரம்செங்குன்றம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதனால், இப்பேருந்து நிலையத்திலிருந்து 36 வழித்தடங்களில், 202 பேருந்துகள் கடந்த 2025 ஜூன் மாதம் முதல் புழல் ஏரியின் எதிா்புறமுள்ள சாமியாா் மடத்தின் காலி வளாகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூா், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, புழல், கிராண்ட் லைன் மாா்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்ட சாமியாா் மடம் காலி வளாகத்துக்கு வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இங்கிருந்து இயங்கும் பேருந்துகளின் தடம்1.திருவள்ளூா் மாா்க்கம்- 62 ‘பி’, 61 ‘ஆா்’, 65 ‘எச்’, 505, 505 ‘கே’2.பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி மாா்க்கம்- 512, 547, 557, 557 ‘ஏ’ எக்ஸ்டன்ஸன், 557 ‘சி’, 557 ‘எம்’, 558 ‘ஏ’, 558 ‘பி’, 558 ‘சி’, 558 ‘பி’, 592, 593 கட்.3.புழல் மாா்க்கம்- 113, 114, 114 ‘ஏ’, 242, 57, 157, 157 ‘இ’, 62, 62 ‘ஏ’, 62கட், 104, 104 ‘கே’, 57 ‘சி’, 57 ‘சி’ கட்.4.கிராண்ட் லைன், அருமந்தை மாா்க்கம்- 57‘இ’, 57‘ஜி’, 36‘கே’, 36‘வி’, 58 ‘வி’என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. What is the problem opening Redhills bus terminus?