சென்னை, 10 மாவட்டங்களில் இரவு 7 வரை மழைக்கு வாய்ப்பு!

Wait 5 sec.

தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு மிதமான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், இன்றிரவு 7 மணி வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, விருதுநகர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Chance of rain in Chennai and 10 districts until 7 PM!4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!