2 இலக்குகளை கூட்டணியின் பெயரில் வைத்துள்ளோம்: வைகோ பேட்டி

Wait 5 sec.

தங்களின் 2 இலக்குகளையே தவெக தலைமையிலான கூட்டணியின் பெயரில் வைத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (செப். 9) தெரிவித்தார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிக் கூட்டம் இன்று (செப். 9) நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொகிதீன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தவெக கூட்டணிக்கான பெயர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைகோ பேசியதாவது: ''கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டணிக்கு பெயர் வைப்பதில் ஒரே விதமான கருத்தை முன்வைத்து பெயரை முடிவு செய்துள்ளோம். கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரை வைத்துள்ளோம். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்ற பெயரிலேயே எங்களுடைய இலக்குகள் இரண்டையும் ஒன்றாக வைத்துள்ளோம். சட்டப் பேரவையில் முதல்வர், காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் ஆணித்தனமான கருத்துகளை முன்வைத்ததை கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம். இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெக எடுக்கும் முடிவின்படி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தோழமைக் கட்சித் தலைவர்களோடு இரண்டு தொகுதிகளிலும் முதல்வர் விஜய், பிரசாரக் கூட்டங்களை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் சொன்னதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தோளோடு தோள் நின்று, வெற்றியை சேர்ந்து கொண்டாடுவோம். தமிழகம், புதுவையில் வெற்றிகரமாக இக்கூட்டணி செயல்படும், தேர்தல் களத்திலும் வெற்றி வாகை சூடும் என்ற நம்பிக்கையுடன் கூட்டம் நடந்து முடிந்துள்ளது'' எனப் பேசினார். இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு!TVK Alliance name We have set two goals in the alliance name says Vaiko's