புதுவை தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அக். 6 ஆம் தேதி நடைபெறவுள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேது என்கிற சேது செல்வம் திமுக வேட்பாளராகப் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. செப்டம்பர் 16-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 19-ம் தேதி திரும்பப்பெற கடைசி நாளாகும். அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என முதல்வர் ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்துள்ளார். திமுக தனித்துப் போட்டியிட ஆலோசித்து வரும் நிலையில், தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் மீண்டும் போட்டியிடுகிறார் எனத் தகவல்கள் வருகிறது.தட்டாஞ்சாவடி தொகுதியில் 26,797 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு!Thattanchavady by election DMK candidate announced