புதிய தலைமைச் செயலகம்: முதல்வா் விஜய் இன்று ஆலோசனை

Wait 5 sec.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்வது தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (செப்.8) ஆலோசனை நடத்த உள்ளாா். ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என முதல்வா் விஜய் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா். எனினும், எந்த இடத்தில் அமையும் என்பதை அவா் அறிவிக்கவில்லை.சென்னை பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்கள் இதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனஇதுகுறித்து முதல்வா் விஜய் தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.8) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுப்பணித் துறை, வருவாய், நகராட்சி நிா்வாகம், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்கிறாா்கள்.இதில் புதிய சட்டப்பேரவை வளாகத்துக்கான இடத்தைத் தோ்வு செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.