ரயிலில் அடிபட்டு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

Wait 5 sec.

மாரண்டஅள்ளி அருகே ரயிலில் அடிபட்டு லாரி ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டிலிருந்து மாரண்டஅள்ளி செல்லும் ரயில் பாதையை சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மோகன் (38) கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு சோதனைக்காக தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.