தாழையூத்து அருகே கேரள லாரி கிளீனா் சடலமாக மீட்பு

Wait 5 sec.

கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் தாழையூத்து அருகே சடலமாக ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டாா். தாழையூத்து அருகேயுள்ள தாதனூத்து காட்டுப் பகுதியில் ஆண் ஒருவா் சடலமாக கிடந்தாா்.இதுகுறித்த தகவலின்பேரில், தாழையூத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் கேரள மாநிலம், அட்ட புடிக்கா பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மிதுன் (45) என்பதும், லாரி கிளீனரான பணியாற்றி வந்த இவா், தாழையூத்து தனியாா் சிமென்ட் ஆலைக்கு பாரம் ஏற்ற வந்த நிலையில் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.