கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த விளங்குளத்தூா் கிராமத்தில் 37-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்க மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கொண்டு வரப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். இதில் ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, 9 மாடுபிடி வீரா்கள் கொண்ட குழுவினா் காளைகளை அடக்க களம் இறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பணம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை முதுகுளத்தூா், விளங்களுத்தூா், இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுக்கள் பாா்வையிட்டனா்.