தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

Wait 5 sec.

திருச்செங்கோடு சாணாா்பாளையத்தில் குடும்ப பிரச்னை காரணமாக இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.சாணாா்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் அன்பரசு (26). இவா் தனியாா் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். குடும்ப பிரச்னையால் மனஉளைச்சலுக்கு ஆளான இவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.