பயனர்கள், ஆதார் முக அங்கீகாரத்துக்காக இனி செயலிகளை மாற்ற வேண்டியதில்லை, அதற்காக புதிய டூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள், முக அடிப்படையிலான ஆதார் அங்கீகாரத்தை நேரடியாகத் தங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளில் ஒருங்கிணைத்துக்கொள்ள ஏதுவாக, ஆதார் அமைப்பான யுஐடிஏஐ ஒரு முக அங்கீகார எஸ்டிகே மற்றும் சாண்ட்பாக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய மென்பொருள் டூல் ஆனது, யுஐடிஏஐ முக அங்கீகாரத்தை பெறுவதற்காக, செயலிகளை மாற்றுவதற்கான பிரச்னையை தீர்த்து, விரைவாக செயல்படுத்த உதவுகிறது.ஒரு நிறுவனத்தின் சொந்த செயலியிலேயே, முக அங்கீகாரத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த எஸ்டிகே டூல் செயல்படுவது போல உருவாக்கப்பட்டுள்ளதுதான் தனிச்சிறப்பு.இந்த புதிய மென்பொருள் மேம்பாட்டுக் கருவித்தொகுப்பு (SDK), ஆதார் அமைப்பின் முக அங்கீகார வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் நேரடியாக ஒருங்கிணைக்க உதவுகிறது. இதனால், பயனர்கள் தங்கள் முதன்மை வங்கி அல்லது நிதி நிறுவன செயலியையும், முக அங்கீகாரத்திற்கான தனிச் செயலியையும் மாற்றி மாற்றி செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.முன்பெல்லாம், செயலி வழியாக ஆதார் முக அங்கீகாரத்தை மேற்கொள்ள விரும்பும் பயனர்கள், தங்கள் செல்போனில் 'ஆதார் ஃபேஸ்ஆர்டி' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அதுவும் இனி இருக்காது.புதிய எஸ்டிகே (SDK), முழு அங்கீகாரச் செயல்முறையையும் அந்தந்த நிறுவனத்தின் சொந்த செயலிக்குள்ளேயே செயல்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பதவிறக்கம் செய்து பயன்படுத்த தயாராக உள்ள இந்த எஸ்டிகே, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில், செயல்பாடுகளை நேரலையாக, முறைகேடுகளைத் தடுக்கும் திறனுடன் வந்துள்ளது. இது பயனர்களின் அனைத்து வகையாக ஸ்மார்ட்போன்களிலும் செயல்படும் என்று ஆதார் அமைப்பு கூறுகிறது.இது மட்டுமல்ல, ஆதார் அமைப்பானது ஒரு முக அங்கீகார சோதனைக் களத்தையும் (Face Authentication Sandbox) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், பயனர்களிடையே பயன்பாட்டுக்கு விட்டு சோதித்து, சரிபார்க்க முடிவெடுத்துள்ளது."Face Auth SDK & Sandbox" is a plug-and-play leap for developers building the next generation of secure, more trusted frictionless face authentication. #UIDAIatGFF2026 #SDK #FaceAuthentication #DigitalIdentity pic.twitter.com/U6AvnJf5Qp— Aadhaar (@UIDAI) September 9, 2026 அதன்படி, டெவலப்பர்களும் தரத்தை உறுதிபடுத்தும் குழுக்களும், இந்த சேன்ட்பாக்ஸை பயன்படுத்தி, அதில், முகப் பதிவு, முகத்தை அங்கீகரிக்கும் நபர் உயிருடன் இருக்கிறாரா எனச் சரிபார்த்தல், அங்கீகாரம் அளித்தல், பிழைகள் இருந்தால் அதனைக் கையாளுதல், மீண்டும் சரிபார்த்தல் ஆகியவற்றைச் சோதிக்ககப் பயன்படுத்தலாம்.மேலும், இது கூடுதலாக பயோமெட்ரிக் ஹார்ட்வேர் பேயன்படுத்தாமலேயே, செல்லாத டிஜிட்டல் கையொப்பங்கள், நெட்வொர்க் சிக்கல்கள், காலாவதியானது மற்றும் ஏமாற்று முயற்சிகள் உள்ளிட்ட தோல்வியடையும் செயல்பாடுகளையும் பரிசோதிக்க உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வசதிகள் மூலம், முக அங்கீகார வசதி கொண்ட சேவைகளை எளிதாகச் செயல்படுத்த முடிவதன் மூலம், அரசுத் துறைகள், வங்கிகள், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. new feature no need to switch apps for Aadhaar face authentication