பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஃபோல்ட் போனான ‘ஐபோன் டியோ’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதுமே அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.இந்த நிலையில், கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், ஐபோன் 18 சீர்ஸ் போன்கள், ஏர்பாட்ஸ் 5 மற்றும் புதிய வாட்ச் சீரிஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டது.மேலும், இந்த நிகழ்வில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஐபோன் டியோ’ ஃபோல்ட் போனும் அறிமுகம் செய்யப்பட்டது.விலை எவ்வளவு?இந்தியாவில் ‘ஐபோன் டியோ’ போனுக்கான முன்பதிவு வருகின்ற அக். 16 முதல் தொடங்குகிறது. அக். 23 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.256 256 ஜி.பி. சேமிப்பு திறன் கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ. 2,99,900-க்கும், 512 ஜி.பி. மாடல் ரூ. 3,24,900-க்கும், ஒரு டிபி மாடல் ரூ. 3,74,900-க்கும், 2 டி.பி. மாடல் ரூ. 4,49,900-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. ஸ்டார் ஒயிட், நைட் ஸ்கை ஆகிய 2 வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.இதேபோல், ஐபோன் 18 ப்ரோ 256 ஜி.பி. மாடல் ரூ. 1,64,900-க்கும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 256 ஜி.பி. மாடல் ரூ. 1,79,900-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.சிறப்பம்சங்கள்ஐபோன் டியோவில் 7.6 அங்குல ‘சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர்’ ஃபோல்ட் ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. ஸ்க்ரீனில் மடிக்கக்கூடிய கோடு தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவும், 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமராவும் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் ‘சென்டர் ஸ்டேஜ்’ கேமரா வழங்கப்பட்டுள்ளது.ஒருமுறை சார்ஜ் செய்தால் 44 மணிநேரம் வரை உபயோகிக்கலாம் எனக் கூறப்படுகிறது. 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 5 மணிநேரம் உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இ-சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். Apple's first foldable iPhone Duo has been released! How much does it cost?ஆடியோ கேட்க இனி ஹெட்செட் தேவையில்லை! அறிமுகமானது ஃபையர் போல்ட் ஸ்மார்ட் கண்ணாடி!