வடக்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Wait 5 sec.

புது தில்லி: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கதேசம் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தகவலின்படி, வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கதேசம் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கு நேரடியாக எந்த பாதிப்பும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவப்பு எச்சரிக்கைஒடிசாவின் சில மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் வியாழக்கிழமை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் மிக அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது.அடுத்த இரண்டு நாள்களில் அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கேரளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும்.தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, இமயமலை அடிவாரப் பகுதிகளை ஒட்டிய மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில், இந்த மாதம் 15-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் நாளை வரை இதே போன்ற வானிலை நிலவக்கூடும். கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் இன்று வெப்பமான மற்றும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய வானிலை நிலவ வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. IMD has issued a red colour warning for heavy to very heavy rainfall,பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ: 5 பேர் பலி; 42 பேர் மீட்பு, 87 பேர் மாயம்