திரைப்படங்களில் வருவது போல, முதலில் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று முதல்வர் ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா? என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் மேற்கு மாட வீதியில் பிரதீப் ராஜ் என்பவர் அடையாள தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை நேரில் அழைத்து மிரட்டியதாக நேற்று புகார் கூறியிருந்த நிலையில் இன்று படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்த நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. முதல்வர் ச. ஜோசப் விஜய், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது" என்று பதிவிட்டுள்ளார். Is the Chief Minister planning something like in the movies, Kanimozhiதீபாவளிக்கு மறுநாள் (நவ. 9) - ரயில் டிக்கெட் முன்பதிவு: கடும் அதிருப்தியில் பயணிகள்!