ரபீனியா, லமின் யமால் அசத்தல்: சாம்பியன்ஸ் லீக் முதல் போட்டியில் பார்சிலோனா அபாரம்!

Wait 5 sec.

சாம்பியன்ஸ் லீக் 2026/27 சீசனின் தனது முதல் போட்டியில் ஃபெயினூர்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா அணி 5-1 என அபார வெற்றியைப் பெற்றது.இந்தப் போட்டியில் கேப்டன் ரபீனியா 2 கோல்கள் அடித்து அசத்தினார். இந்த சீசனில் மொத்தமாக 8 கோல்கள் அடித்து ஐரோப்பிய கிளப்பிலேயே முதலிடத்தில் இருக்கிறார். பார்சிலோனா அணி சாம்பியன்ஸ் லீக்கில் இந்த சீசனின் முதல் போட்டியில் 3, 57ஆவது நிமிஷங்களில் ரபீனியா கோல் அடித்தார். கரீம் அடேயமி 22ஆவது நிமிஷத்திலும் லமின் யமால் 77ஆவது நிமிஷத்திலும் கேப்ரியல் ஜீசஸ் 85ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள். கேப்ரியல் ஜீசஸ் பார்சிலோனாவுக்கு அடித்த முதல் கோல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. லமின் யமால் இதில் 2 அசிஸ்ட்டுகளை செய்ததும் கவனிக்கத்தக்கது. இந்தப் போட்டியில் பார்சிலோனா 67 சதவிகித நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பார்சிலோனா அணியினர் அடித்த 22 ஷட்டுகளில் 9 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. 797 பாஸ்களை செய்த பார்சிலோனா அணியினர் 94 சதவிகித துல்லியத்துடன் விளையாடினார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக்கை வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறார்கள்.ரபீனியாவின் கோல் அடித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சாம்பியன்ஸ் லீக் தனது எக்ஸ் பக்கத்திலும் அதனைப் பாராட்டி பதிவிட்டுள்ளது.That Raphinha goal @Heineken | #UCLGOTD pic.twitter.com/btLO1gRuSx— UEFA Champions League (@ChampionsLeague) September 9, 2026இந்தியாவுக்கு எதிரான பிரேசில் கால்பந்து அணி அறிவிப்பு..! வினிசியஸ், ரபீனியா உள்பட 26 பேர் சேர்ப்பு!Raphinha strikes twice as Barcelona starts Champions League with 5-1 rout of Feyenoord