மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு செ.கு.தமிழரசன் ஆதரவு!

Wait 5 sec.

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வியாழக்கிழமை ஆதரவு தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வியாழக்கிழமை காலை(செப்.10) வந்த இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், இடைத் தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தார்.அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.C.K.Tamizharasan extends support to the DMK alliance in the Maduranthakam and Dharapuram by-elections!தவெகவுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு உண்டு; மிசா கொடுமையைச் சந்தித்தவர் மு.க. ஸ்டாலின்! திருமாவளவன்