தமிழகம், புதுவை உள்பட 4 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

Wait 5 sec.

தமிழகம், புதுவை உள்பட 4 மாநிலங்களுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் புதுவையில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதிக்கும் அசாம் மாநிலத்தில் நாகான் தொகுதிக்கும் இடைதேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த நிலையில், தமிழகம், புதுவை உள்பட 4 மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கும் அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் - செப். 9வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப். 16வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் - செப். 19அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அக். 11 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.The Election Commission of India has announced by-elections for four states, including Tamil Nadu and Puducherry.மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!