நடிகர் ஷண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயரை படக்குழு திங்கள்கிழமை (செப். 7) அறிவித்துள்ளது.மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகனான ஷண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.இதைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த கொம்புசீவி திரைப்படமும் பெரியளவில் கவனம் பெறவில்லை.ஷண்முக பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அந்தப் படத்துக்கு “கிங் அண்ட் குயின்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் படத்தை எல்.கே. சுதீஷ் தயாரிக்க, இயக்குநர் மணி சியோன் இயக்குகிறார். மேலும், இந்தப் படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தடுத்து 5 திரைப்படங்களில் நடிக்கும் ஷண்முக பாண்டியன்!The film crew announced the title of the new movie starring actor Shanmuga Pandian on Monday (Sept. 7).