துலீப் கோப்பை: இஷான் கிஷன் அபாரம்; 708 ரன்கள் குவித்த கிழக்கு மண்டலம்!

Wait 5 sec.

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வருகிறது. கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் இடையேயான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.இஷான் கிஷன் அபாரம்; 708 ரன்கள் குவித்த கிழக்கு மண்டலம்!டாஸ் வென்று முதலில் விளையாடிய கிழக்கு மண்டலம் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 334 பந்துகளில் 270 ரன்கள் எடுத்தார். அதில் 30 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குமார் குஷாக்ரா சதம் விளாசியும், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் ஷிகர் மோகன் அரைசதம் விளாசியும் அசத்தினர். குமார் குஷாக்ரா 101 ரன்கள், ஷிகர் மோகன் 85 ரன்கள், அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்கள் எடுத்தனர். அனுகுல் ராய் 45 ரன்கள் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்தனர்.தெற்கு மண்டலம் தரப்பில் திரிபுரனா விஜய் 4 விக்கெட்டுகளையும், சமா வி மிலிண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷேக் ரஷீத் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் கிழக்கு மண்டலம் அதன் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எடுத்து ஆட்டமிழந்த நிலையில், நாளை (செப்டம்பர் 8) மூன்றாம் நாள் ஆட்டத்தில் தெற்கு மண்டலம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.Batting first in the final of the Duleep Trophy cricket tournament, East Zone was bowled out for 708 runs in the first innings.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!